படுக்கை அறை காட்சியாக இருந்தாலும் நடிப்பேன்! தனுஷ் பட நடிகை பரபரப்பு பேட்டி!!

0
130
#image_title

படுக்கை அறை காட்சியாக இருந்தாலும் நடிப்பேன்! தனுஷ் பட நடிகை பரபரப்பு பேட்டி!!

படுக்கை அறை காட்சியாக இருந்தாலும் நான் நடிப்பேன் என்று பட்டாசு திரைப்படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ணா காடி வீரா பிரேமா காதா’ என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகையாக மெஹ்ரீன் பிர்சாதா அறிமுகமானார். அதன் பின்னர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான பட்டால் திரைப்படத்தில் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் நடித்துள்ளார். இந்நிலையில் படுக்கையறை காட்சியாக இருந்தாலும் நான் நடிப்பேன் என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் “நான் தற்பொழுது ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகள் உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம்.

இதில் சில கிளாமரான கட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் வரும். என்னுடைய தோழிகள் ஏன் இது போன்ற காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்கிறாய் என்று கேள்வி கேட்டனர். என்னை பொறுத்தவரை கிளாமர் காட்சிகள், முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் அனைத்தும் படத்தின் ஒரு பகுதி தான். நடிகை என்றால் ஒரு படத்திற்கு தேவையான காட்சிகளில் நடித்து கொடுக்க வேண்டும். அதைத் தான் நான் செய்கிறேன்.

ஒரு படத்தின் கதைக்கு தேவை என்றால் லிப் லாக் காட்சி, பிகினி உடை காட்சி, படுக்கையறைக் காட்சி என்று எல்லா காட்சிகளிலும் நடிப்பேன். ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எந்த காட்சியாக இருந்தாலும் சரி. யோசிக்க மாட்டேன். நடித்து விடுவேன். என்னை பொறுத்தவரை நடிப்பு என்றால் நடிப்பு மட்டும் தான். எனக்கு நடிப்புதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் இவ்வாறு ஓபனாக பேசியது திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகை மெஹ்ரீன் பிர்சாதா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் ஸ்பார்க் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா நீ சிகுவரேகு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.