இவர்கள் மறந்தும் இந்த காளானை எடுக்கக் கூடாது.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!!

Photo of author

By Rupa

இவர்கள் மறந்தும் இந்த காளானை எடுக்கக் கூடாது.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!!

இன்றைய தினங்களில் அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு காளான் அசைவ உணவு சுவையை தரும் உணவு பொருளாக இருக்கின்றது.

இந்த காளானை சாப்பிட்டால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். பலவிதமான நோய்களையும் இது பாதுகாக்கின்றது. காளானில் அதிகமான அளவு புரோட்டீன்களும், குறைவான அளவு கலோரிகளும் உள்ளதால் இது உடல் எடையை குறைக்கின்றது. காளான் நமக்கு விரைவில் ஜீரணமாக உதவி செய்கின்றது.

இதய நோய் வராமல் பாதுகாக்கின்றது. கேன்சர் வராமல் தடுக்கின்றது.

என்னதான் காளான் நல்ல உணவு பொருளாக இருந்தாலும் சில பேர் இந்த காளானை சாப்பிடக்கூடாது. அப்படி யாரெல்லாம் காளானை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

காளானை பயன்படுத்தும் முறை

* காளானை சுத்தம் செய்ய சில முறைகள் உள்ளது. அதாவது ஒரு பாத்திரத்தில் காளானை சுத்தம் செய்ய நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். பிறகு அந்த நீரில் காளானை போட்டு சுத்தம் செய்யலாம். ஏன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும் என்றால் காளான் விரைவாக கருப்பாக மாறாமல் இருக்கவும் மற்றும் சமைக்கும் பொழுது அது இரப்பர் போல மாறாமல் இருக்கவும் தான்.

* காளானை வாங்கிய நாளில் இருந்து மூன்று நாட்கள் வரை வைத்து நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம். மூன்று நாட்களுக்கு மேல் காளானை பயன்படுத்தக் கூடாது. சிலர் பாக்கெட்டிலிருந்து பாதி காளான் மட்டும் எடுத்து பயன்படுத்தி விட்டு மீதியை அப்படியே வைத்துவிடுவார்கள். அப்படி செய்யக் கூடாது. ஏனென்றால் காளான் விரைவாக கருப்பு நிறமாக மாறி பயன்படுத்த முடியாமல் ஆகி விடும்.

* குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் காளானை சாப்பிடக்கிடாது. ஏனென்றால் காளானில் தாய்ப்பாலை வற்ற வைக்கும் குணம் உள்ளது.

* காளானில் பல வகைகள் உண்டு. அதில் நாம் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். விஷக் காளான் உள்ளது. அது பார்க்க நன்றாகவும் துர்நாற்றம் அடிக்கக் கூடியதாகவும் இருக்கும். எனவே காளான் வாங்கும் பொழுது நன்றாக பார்த்து வாங்க வேண்டும்.

* விஷக்காளானை தெரியாமல் சாப்பிட்டு விட்டால் முதலில் சோம்மு கஷாயம் செய்து குடிக்க வேண்டும். இந்த காளானில் உள்ள விஷத்தை போக்கும் தன்மை சோம்பில் உள்ளது. அதனால் இந்த விஷக் காளானை சாப்பிட்டால் உடனடியாக சோம்பு கஷாயத்தை வைத்து குடிக்க வேண்டும்.

* கீழ் வாதம் நோய் உள்ளவர்கள் காளானை சாப்பிடக் கூடாது.

* நாம் ரோட்டுக் கடைளில் காளான் சில்லி என்று அனைவரும் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அது உண்மையான காளான் அல்ல.

முட்டைக் கோஸுடன் மைதா மாவு சேர்த்து சிறிதளவு உப்பை சேர்த்து அதை எண்ணெயில் பொறித்து அதை காளான் என்று விற்பனை செய்கின்றனர்.

அது உண்மையான காளான் அல்ல. இந்த மாதிரி சாப்பிடுவதற்கு நாம் நமது வீட்டில் ஆரோக்கியமான முறையில் காளானை செய்து சாப்பிடலாம்