சின்ன வெங்காயம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இது தெரிந்தால் தினமும் சாப்பிடுவார்கள்!!

Photo of author

By Rupa

நம் சமையலறையில் இருக்க கூடிய உணவுப் பொருளான சின்ன வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.சாதாரணமாக நினைக்கும் சின்ன வெங்காயம் பல ஆபத்தான நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக திகழ்கிறது.

தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.மூல நோயாளிகள் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் உரிய பலன் கிடைக்கும்.

சின்ன வெங்காயம்
இலவம் பிசின்
கற்கண்டு
பால்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு நறுக்கிய சின்ன வெங்காயம்,சிறிது இலவம் பிசின் மற்றும் கற்கண்டு தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடல் சூடு,மலச்சிக்கல்,பைல்ஸ் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி நெயில் வதக்கி சாப்பிடலாம்.அதேபோல் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்குறி விறைப்புத் தன்மை பிரச்சனை சரியாகும்.

சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலப்படும்.அது மட்டுமின்றி சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணமாக சின்ன வெங்காயத்தில் தேநீர் செய்து குடிக்கலாம்.

சின்ன வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால்’இதய ஆரோக்கியம் பலப்படும்.சின்ன வெங்காயத்தில் உள்ள சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி,பி,நார்ச்சத்து,தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.இது மலச்சிக்கல்,மூட்டு வலி போன்ற பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.