நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!!

0
100
#image_title

நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!!

மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை நாளைக்குள் மீண்டும் பழையபடி சரியாகி விடும் என்று தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

மிக்ஜம் புயல் காரணமாக வெள்ள சீரமைப்பு பணி நிலவரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது வெள்ள சீரமைப்பு பணி குறித்து பார்க்கலாம் பேசிய அவர் “ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. புழல் ஏரியில் இருந்து காலை முதல் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தாம்பரம், ஆதனூர், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் இருந்து அடையாறு ஆற்றுக்கு வெள்ளம் வருகின்றது. இதன் காரணமாக அடையாறு ஆற்றில் உள்ள நந்தம்பாக்கம் தடுப்பணை பகுதிக்கு 37 ஆயிரம் தண்ணீர் வருகின்றது. இதில் 2500 கன அடி தண்ணீர் செம்பரம்பாக்கத்தில் இருந்து வருகின்றது. அடையாறு மற்றும் கூவம் ஆகியவற்றின் முகத்துவாரங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றது.

பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரினாது ஒக்கியம் மடுவு வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்கின்றது. வெள்ளம் அதிகமாக இருக்கும் இந்த பகுதிகளில் வெள்ளத்தை வெளியேற்றுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

சென்னையில் உள்ள நிலைமையை சரி செய்வதற்கு மற்ற மாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையின் கீழ் மொத்தமாக 25000 தூய்மைப் பணியாளர்கள் சென்னையை சீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல தீயணைப்பு துறை, மீட்புப் துறை, நெடுஞ்சாலைத் துறை என 75000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாம்களில் இருப்பவர்களுக்கும், வீடுகளில் வெள்ளம் காரணமாக சிக்கி இருப்பவர்களுக்கும், இதுவரை 37 லட்சம் உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்துள்ள 806 இடங்களில் இருந்து இதுவரை 19806 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று(டிசம்பர்6) ஹெலிகாப்டர் மூலமாக நான்கு முறை பெரும்பாக்கம், வடசென்னை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 25000 உணவு பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 234 படகுகள் மூலமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. இன்னும் இழப்பு மற்றும் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. இருப்பினும் தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் புயல் வெள்ளத்திற்கு சென்னையில் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிந்துள்ளனர். 311 கால்நடை உயிரினங்கள் இறந்துள்ளது. 378 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. 335 குடிசைகள் மற்றும் 88 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளது.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் சிறிது சிறிதாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெள்ளம் வடியாத வெள்ளம் தேங்கியிருக்கும் பகுதிகளில் உயிரிழப்புகள் தடுக்க மின்சாரம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று(டிசம்பர்6) 14 லட்சம் லிட்டர் பால் மற்றும் 8 மாவட்டங்களில் இருந்து 6650 கிலோ பால் பவுடர் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலமாக 20 லிட்டர் அளவு கொண்ட 15 ஆயிரம் குடிநீர் கேன்கள் வழங்கப்பட்டுள்ளது.

சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்தததும் சாலைகள் சீரமைக்கப்பட்டு புதிய சாலைகள் போடப்படும். மேலும் மிட்செல் பங்குகள் இன்று(டிசம்பர்7) முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். மேலும் சென்னையில் 85 சதவீதம் நெட்வொர்க் சீரமைக்கப்பட்டுள்ளது.

நாளைக்குள் எல்லாம் சரியாகி விடும். போக்குவரத்தும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். வடசென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளில் இன்னும் தண்ணீர் வரவில்லை என்றாலும் அது விரைவில் சரியாகி விடும். எனவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

தேவைக்கு அதிகமாக யாரும் உணவுப் பொருட்கள் வாங்கி வைக்க வேண்டாம். வியாபாரிகள் தண்ணீர் கேன்களை அதிக விலைக்கு விற்பனை அல்லது அத்தியாவசிய பொருட்கள் பதுக்கவோ கூடாது. மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் கல்விச் சான்றிதழ் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மைதானத்தில் சென்னை மீண்டும் பழையபடி வரும்வரை நாங்கள் ஓய்வு எடுக்க மாட்டோம்” என்று கூறினார்.

Previous articleடிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!! விண்ணப்பிக்க டிசம்பர் 18 இறுதி நாள்..!!
Next articleஇது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!!