இது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!!

0
48
#image_title

இது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!!

தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கதிகலங்க வைத்து விட்டு ஓய்வடைந்தது. குறிப்பாக
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாது பெய்த தொடர் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் வீடுகள், கட்டிடங்களில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் பலர் உண்ண உணவின்றி, போதுமான அளவு குடி நீரின்றி தவித்து வருகின்றனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மெத்தனம் காட்டியது போல் மீட்டு பணிகளிலும் திமுக அரசு மெத்தனம் காட்டி வருவதால் பிஞ்சு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உணவு, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருவதால் பொதுமக்களுக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கிறது.

தற்பொழுது மழை நீர் வடிந்து வரும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பால், காய்கறி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைக்கு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் தேவையை அறிந்து பால், வாட்டர், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

1 லிட்டர் பால் 150 வரையும், 1 லிட்டர் தண்ணீர் 100 ரூபாய் வரையும் விற்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மக்களின் கஷ்டத்தை அறிந்து செயல்படலாம் தங்கள் லாப நோக்கத்திற்காக இது போன்று விலை ஏற்றி விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருவது வேதனையான செயலாக இருக்கிறது என்று மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.