பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் ஷாக்.!!

Photo of author

By Vijay

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் ஷாக்.!!

Vijay

சாதிய ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக எழுந்த புகாரில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை குறித்து பேசியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது ஹரியானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போதே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய யுவராஜ் சிங் சக கிரிக்கெட் வீரரான சஹால் மீது சாதிய ரீதியான வன்ம வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சக கிரிக்கெட் வீரரான சகா லுக்கு எதிராக சாதிய ரீதியான வன்மை வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக ஹன்சி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 3 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 153A  மற்றும் 505 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.