லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் அதிரடி சோதனை! சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர்?

0
74

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் இவர் அப்போது இவர் செயல்பட்ட விதம் பொதுமக்களிடையே இவரை பிரபலமாக்கியது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சமயத்தில் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து உடனிருந்து கடைசிவரையில் பார்த்துக் கொண்டவர் இவர்தான். அந்த விவகாரம் இவரை பொதுமக்களிடையே அசுர வளர்ச்சியை அடைய செய்தது அவருடைய இந்த திடீர் வளர்ச்சி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இடையூறாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதோடு திமுக ஆட்சி ஆட்சி அமைந்த பின்னரும்கூட நோய்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் குழுவில் இவர் இடம் பெற்று இருந்தார் என்பதை இவர் நிர்வாகத்திற்கு மேலும் ஒரு நற்சான்று ஆக விளங்கியது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது. விஜயபாஸ்கர் வீடு மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருச்சி உள்ளிட்ட 6 பகுதிகளில் நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

ஆனால் இது தொடர்பாக முழுமையான விவரங்கள் எதுவும் இதுவரையில் தெரிய வரவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ,தங்கமணி மற்றும் வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.