வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்ட நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி மற்றும் அவருடைய சொந்த ஊரான புதுக்கோட்டை என 43 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, அதிமுக அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், கே சி வீரமணி, எஸ் பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.