தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

0
94

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டு காலமாக இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதன் காரணமாக, உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் இன்னும் நான்கு மாதங்களில் இந்த ஒன்பது மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழக தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை தொடங்கியது அதனடிப்படையில் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது இதில் திமுக கிட்டத்தட்ட முழு வெற்றியை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேர்தல் பணிகள் ஆரம்பித்துவிட்டதாக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திருச்சியில் 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் தொடங்கும் எழுத்தில் புதிய மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது இதில் பங்கேற்ற அவர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றியபோது, மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேடுதலை மிக விரைவில் நடத்தி முடிக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆகவே அதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து விட்டது. அதன் அடிப்படையிலேயே மாநகராட்சிகள், நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்து உரையாடி அவர்கள் தெரிவிக்கக்கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும் என கூறியிருக்கிறார் அமைச்சர் கே என் நேரு.

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்து இருந்தார்கள் .ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு சில பகுதிகளில் உருவாக்கு மற்றும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் கூட திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டதால்தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் போல இல்லாமல் மாநில தேர்தல் ஆணையம் தற்சமயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கே என் நேரு.