சேலத்தில் பரபரப்பு! 14மாத குழந்தை திடீர் மரணம்!

0
182
excitement-in-salem-a-14-month-old-baby-died-suddenly
excitement-in-salem-a-14-month-old-baby-died-suddenly

சேலத்தில் பரபரப்பு! 14மாத குழந்தை திடீர் மரணம்!

சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மனைவி பிரியதர்ஷனி.இவர்களுக்கு ஆறு வயதில் தக்சதா என்ற மகளும்,மேகவர்த்தினி என்ற 14 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினி,குழந்தை மேகவர்த்தினிக்கு பால் புகட்டியுள்ளார்.

அதன் பிறகு குழந்தையை கட்டிலில் படுக்க வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அந்த குழந்தைக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டுள்ளது.அப்போது அந்த  குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் பிரியதர்ஷினி கொண்டலாம்பட்டி போலீசார்க்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் குழந்தை திடீரென இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் குழந்தை வலிப்பு வந்து தான் இறந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous article“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!
Next articleவிஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!