அரசுக்கு எதிராக மொரீஷியஸில் வெடிக்கும் போராட்டம்

Photo of author

By Parthipan K

அரசுக்கு எதிராக மொரீஷியஸில் வெடிக்கும் போராட்டம்

Parthipan K

மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கப்பல் விபத்து மொரீஷியஸ் தீவுப்பகுதியில் உள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகள் சம்பவத்தால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் நேற்று திரண்ட ஆயிரக்கணக்கானோர் எண்ணெய் கப்பல் விபத்தை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி  போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 75 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், எண்ணெய் கப்பல் விபத்து ஏற்றப்பதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மொரீஷியஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.