அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Photo of author

By Pavithra

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் முன்பதிவு அதிகமாக உள்ளதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொதுப் போக்குவரத்துகளை இயக்கப்பட்டு வருகின்றன.தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால்,
தொலைதூரம் பயணத்திற்கு,அரசு விரைவு பேருந்துகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சென்னை,மதுரை,கோவை ஈரோடு,சேலம்,திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கிடையே,
நீண்டதூர பேருந்து சேவை செயல்பட்டு வருகின்றது.அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லவும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவும் பேருந்து சேவை அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி,மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து இயக்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனால் அரசு விரைவு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 17000 பேர் முன் பதிவு செய்ததாகவும்,அதில் தினமும் 5 ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும் புள்ளிவிவரம் கூறுகின்றது.சென்னைக்கு பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதினால்,மக்களின் நலனுக்காக இன்று முதல் கூடுதல் அரசு விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.