நமது உடலில் கண் ஒரு சென்சிட்டிவான உறுப்பாகும்.கண்களில் ஒரு தூசி விழுந்தால் கூட அவை சிவந்து வலி கொடுத்துவிடும்.அப்படி இருக்கையில் கண்கட்டி வந்தால் அவை அதிக தொந்தரவை கொடுத்துவிடும்.
உங்களுக்கு அடிக்கடி கண் கட்டி வந்தால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை குணப்படுத்தி கொள்ளலாம்.
கண் கட்டிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்:
தேவையான பொருட்கள்:
1)புளியம் பூ
2)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:
முதலில் புளிய மரத்தில் இருந்து இரண்டு தேக்கரண்டி அளவு புளியம் பூவை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்ய வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து புளியம் பூவை அதில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை கண் கட்டி மீது அப்ளை செய்து நன்றாக காயவிட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 3 தினங்கள் செய்தால் கண் கட்டி மறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)கல் உப்பு
2)காட்டன் துணி
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் தோசை கல் வைத்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு போட்டு நன்றாக வறுத்து காட்டன் துணியில் கொட்டி மூட்டை கட்டிக்கொள்ள வேண்டும்.பிறகு இதை கண் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
தேவையான பொருட்கள்:
1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்கவிட வேண்டும்.பிறகு இந்த நீரை ஆறவைத்து கண்களை கழுவி வந்தால் கண் கட்டி குணமாகும்