வெயில் காலங்களில் ஏற்படும் கண் கட்டி!! இந்த பொருட்களை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் ஒரே இரவில் மறைந்து விடும்!!

Photo of author

By Divya

வெயில் காலங்களில் ஏற்படும் கண் கட்டி!! இந்த பொருட்களை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் ஒரே இரவில் மறைந்து விடும்!!

உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்பட்டால் கண்கள் சூடாகி ஓரத்தில் கட்டி உருவாகும்.இதை தான் கண் கட்டி என்று அழைக்கின்றோம்.இந்த பாதிப்பு வெயில் காலத்தில் தான் அதிகளவு ஏற்படும்.

கண் கட்டி ஏற்பட்டு விட்டால் அதை தொடக் கூடாது.கண்களை தேய்க்க கூடாது.அதுமட்டும் இன்றி கண் இமைகளின் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் கட்டி உருவாகும்.இந்த கண் கட்டியை வீட்டு வைத்தியம் மூலம் குணபடுத்திக் கொள்ளலாம்.

கண் கட்டியை குணமாக்கும் வீட்டு வைத்தியம்:-

1)மண் பாத்திரத்தில் சாதம் செய்து அதை ஒரு காட்டன் துணியில் வைத்து மூட்டை போல் கட்டிக் கொள்ளவும்.இதை கண் கட்டிகள் மேல் ஒத்தடம் போல் கொடுத்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

2)சிறிது கல் உப்பு எடுத்து வறுத்து காட்டன் துணியில் மூட்டை கட்டி கண் கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்தால் அவை சில தினங்களில் குணமாகும்.

3)ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் கண் கட்டி நீங்கும்.

4)வெது வெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து கண்களை கழுவி வந்தால் கண் கட்டி குணமாகும்.

5)குளிர்ந்த நீரில் கண்களை திறந்த படி வைத்தால் கண் சூடு குறையும்.இதனால் கட்டி ஏற்படாமல் இருக்கும்