மாரடைப்பு வருவதை காட்டிக் கொடுக்கும் கண்கள்! இப்படி இருந்தால் ஜாக்கிரதையாக இருங்

Photo of author

By Sakthi

மாரடைப்பு வருவதை காட்டிக் கொடுக்கும் கண்கள்! இப்படி இருந்தால் ஜாக்கிரதையாக இருங்க
நமக்கு மாரடைப்பு அல்லது இதயம் சார்ந்த நாய்கள் ஏதேனும் இருப்பின் அதை நம்முடைய கண்களை காட்டிக் கொடுத்து விடுமாம். ஆம் நம்முடைய கண்கள் எல்லா நேரங்களிலும் ஓரே முறையில் இருக்காது. ஒரு சமயங்களில் சிவந்து காணப்படும். ஒரு சில நேரங்களில் உறுத்தும். ஒரு சில நேரங்களில் குடையும். ஒரு சில நேரங்களில் கண்கள் வலி இருக்கும்.
ஒரு சில நேரங்களில் பார்வை குறைவாக இருக்கும். ஒரு சில நேரங்களில் மங்கலாக தெரியும். இவ்வாறு ஒவ்வொரு தடவையும் கண்கள் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் பொழுது இதயம் சார்ந்த நோய்களை குறிக்கும். அது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம்.
பார்வை இழப்பு, மங்கலான பார்வை…
நமக்கு பார்வை இழந்தாலோ அல்லது மங்கலான பார்வை இருந்தால் அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இது எதனால் ஏற்படுகின்றது என்றால் நம்முடைய கண்களில் உள்ள பார்வை நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் சரிவர இல்லாமலோ அல்லது குறைந்தாலோ இந்த பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு மங்கலான  பார்வை இருந்தாலோ அல்லது பார்வை குறைபாடு இருந்தாலோ அது மாரடைப்பு வருவதற்கான அறிகுறியாக  இருக்கும். அப்பொழுது சிறிதும் கூட யோசிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
கருவிழிகளின் வடிவம்…
மாரடைப்பு ஏற்படப் போகின்றது என்பதை காட்டும் முக்கியமான அறிகுறி என்ன என்றால் கண்களில் உள்ள கருவிழிகள் சமமற்ற அளவில் இருக்கும். அதாவது ஒரு கண்ணில் இருக்கும் கருவிழி மற்றொரு கண்ணில் இருக்கும் கருவிழியை விட பெரிதாக இருக்கும். எனவே அவ்வாறு கருவிழிகளின் வடிவத்தில் மாற்றம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
கண்களில் தோன்றும் மஞ்சள் நிற புடைப்புகள்…
கண்களில் சில சமயங்களில் மஞ்சள் நிறத்தில் புடைப்புகள் தோன்றும். இதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி தான்.  இது எவ்வாறு தோன்றுகின்றது என்றால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேரும். பொழுது கண்களில் மஞ்சள் வண்ணத்தில் புடைப்புகள் ஏற்படும். இது சாந்தெலஸ்மாஸ் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு கண்களில் மஞ்சள் நிறப் புடைப்புகள் இருக்கும் பொழுது உடலில் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
தொங்கும் இமைகள்…
கண்களின் இமைகள் தொங்குவதும் கூட மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளின் ஒன்று தான். கண்களின் இமைகள் தூங்குவது என்பது ஒரு வகையான நரம்பு பிரச்சனை ஆகும். இதை ஹார்னர்ஸ் சிண்ட்ரோம் என்று கூறுவர். நரம்பு பிரச்சனையாக  இருந்தாலும் இது மாரடைப்பையும் ஏற்படுத்தி விடும்.
கண்கள் சிவப்பாக இருப்பது…
நம்முடைய கண்கள் சிவந்து காணப்படுவதும் மாரடைப்புக்கான அறிகுறிகளில் ஒன்று தான். பொதுவாக நம்மில் பலருக்கு கண்கள் சிவப்பாக காணப்படும். அவ்வாறு சிவப்பாக காணப்படுவது சரியான தூக்கம் இல்லாதது தான் என்று நாம் நினைப்பது வழக்கம். ஆனால் கண்கள் சிவப்பாக இருப்பது மாரடைப்புக்கான அறிகுறிகளின் ஒன்று என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.