இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி டாக்டர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

Photo of author

By Janani

இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி டாக்டர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

Janani

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த போலி அக்குபஞ்சர் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மதிகெரெ பகுதியில் வெங்கடநாராயணா என்பவர் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் கிளினிக்கிற்கு வரும் பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், வெங்கடநாராயணா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வெங்கடநாராயணாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

வெங்கடநாராயணா 12ம் வகுப்பு வரை படித்ததாகவும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர் பயிற்சி வகுப்பில் அக்கு பஞ்சர் பற்றி தெரிந்து கொண்டு இரண்டு வருடங்கள் அதற்கான பயிற்சியை எடுத்துள்ளார். அதன்பின்னர், இந்த அக்குபஞ்சர் மையத்தை தொடங்கியது தெரியவந்தது.

அந்த கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்கள், மற்றும் குடும்ப பெண்களிடம் ஆடையை கழற்ற சொல்லி அவர்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வைத்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.