குறட்டையை ஒழிக்க இதை ஒன்றைச் செய்தாலே போதும்!! குறட்டை முற்றிலும் நின்றுவிடும்!

0
215

குறட்டையை ஒழிக்க இதை ஒன்றைச் செய்தாலே போதும்!! குறட்டை முற்றிலும் நின்றுவிடும்!

குறட்டை பிரச்சனையால் பலரும் வெளியில் சென்று இரவு நேரங்களில் தங்குவதையே தடுத்து விடுகின்றனர்.அதிலும் குறிப்பாக ஹாஸ்டல் மாணவர்கள்,வெளியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் என சில நபர்களுக்கு அதிக அளவில் குறட்டை வருவதால் அவர்களின் சக நண்பர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி பெரிதும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றன.இனி கவலை வேண்டாம் கீழே கொடுத்துள்ள டிப்ஸை பயன்படுத்தினால் வெகு விரைவில் உங்கள் குறட்டை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

முதலில் குறட்டை வருவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.இதனை சரி செய்ய எளிய வழி இதோ!

தேவையான பொருட்கள்:

மஞ்சள்தூள் ஏலக்காய் தேன்

செய்முறை

50 மில்லி தண்ணீரை எடுத்து அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஏலக்காயை தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.பின்பு இந்த நீரை வடிகட்டி கால் டீஸ்பூன் தேன் சேர்த்து இரவு தூங்கும் முன்பு சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.இதனை குடித்த பிறகு உணவு ஏதும் உட்கொள்ளக் கூடாது.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் குறட்டை ஒலி குறைய தொடங்கி சில நாட்களிலே முற்றிலும் நின்று விடும்.

இது மட்டுமின்றி இந்த நீரை இரவில் குடிப்பதால்,நெஞ்சு சளியை கரைக்கவும் சளி பிடிக்காமல் தடுக்கவும் உதவும்.

Previous articleஇளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி டாக்டர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
Next articleமூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! இது ஒன்றே போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here