தங்கம் விலையில் சரிவு..! சவரனுக்கு ரூ.80 குறைவு..!

Photo of author

By Divya

தங்கம் விலையில் சரிவு..! சவரனுக்கு ரூ.80 குறைவு..!

Divya

தங்கம் விலையில் சரிவு..! சவரனுக்கு ரூ.80 குறைவு..!

கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிவை நோக்கி சென்ற நிலையில் நேற்று திடீரென்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது.

இதனால் தங்கம் வாங்க இருப்பவர்கள் கலக்க மடைந்தனர். தங்கம் மீண்டும் மளமளவென உயர்ந்து விடுமோ என்று அஞ்சப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,850க்கும், ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்து இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

24 கேரட் கோல்ட்: நேற்று 1 கிராம் ரூ.6382க்கும், ஒரு சவரன் ரூ.51,056க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்து இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,372க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.50,976க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளி: விலை மற்றம் இன்றி 1 கிராம் ரூ.76க்கும், 1000 கிராம் ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று சற்று குறைந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.