செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை..!

0
218
#image_title

செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபடும் அமலாக்கத்துறை..!

அரசு வேலை பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி.. அமலாத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், அவரது தம்பி அசோக் குமார் வீடு, அவருக்கு நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடங்கள் என்று பல இடங்களில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட அமலாக்கத்துறை… இந்த சோதனையின் மூலம் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

அமலாக்கத்துறை.. செந்தில் பாலாஜியிடம் பண மோசடி குறித்து தொடர் விசாரணை மேற்கொன்டு வருவதால் அவரின் ஜாமீன் மனுவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதுமட்டும் இன்றி செந்தில் பாலாஜி செய்த மோசடிக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதால் அவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறது.

நேற்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 15 ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு உள்ளது. 19வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்று அவரது கரூர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அமைச்சரின் கரூர் வீட்டில் வருமான வரித்துறை… அமலாக்கத்துறை… பலமுறை சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு இருப்பது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.