தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நமது பருத்திவீரன் கார்த்தி .இவர் கடந்த சில வருடாமாக நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிபெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வெளியான விருமன்,பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது.
இவற்றை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .
நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை நெட்வொர்க் ஆசாமிகள் ஹேக் செய்து விட்டதாக நடிகர் கார்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து அந்த பேஸ்புக் பக்கத்தை மீட்டு எடுக்கும் பணி நடை பெற்று வருகிறதாம் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை நெட்வொர்க் ஆசாமிகள் ஹேக் செய்து ஆன்லைன் கேம் விளையாடி வருவதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துபவர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.