பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

0
465
Famous actor sudden death! Film industry in sadness!
Famous actor sudden death! Film industry in sadness!

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்!

தொண்டகரேவை சேர்ந்தவர் லோஹிதாஸ்வா. இவர்  கன்னட திரைப்படங்களில் பழம்பெரும் மூத்த நடிகராக வளம் வந்தவர்.இவர் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.அதில் மிக புகழ்பெற்ற படங்கள் என்றால் அபிமன்யு ,ஏகே 47,அவதார புருஷா ,சின்னா,கஜேந்திரா ,விஷ்வா ,ஸ்நேகா லோகா ,போலீஸ் லாக்கப் ,சுந்தர காண்டா ,டைம் பாம் உள்ளிட்ட படங்கள் தான்.

மேலும் இவர் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் இருகின்றனர்.இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.அதனால் அவரை சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.மேலும் அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக குமாரசாமி லே அவுட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.அதையடுத்து சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்று அவருடைய மகன் தெரிவித்தார்.நடிகர் லோஹிதாஸ்வா மறைவிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபொய் செய்திகளை பரப்புவதற்கு தான் ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்!  போலி கணக்குகளுக்கும் இனி ப்ளூ டிக்!
Next articleநாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!