இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றி அமைத்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவரது பந்து வீச்சுக்கு எதிரணியினர் திணறுவது வழக்கம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தவர் புவனேஸ்வர்.
இவர் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசுவதில் பெயர் பெற்றவர் இதன் காரணமாகவே இந்தியாவில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்த இவர் காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. ஆனால் சரியான பின்பும் ஏனோ அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்காக விளையாடியது இவரது கடைசி ஆட்டமாகும். காயத்தின் காரணமாக இவர் ஓய்வில் இருந்ததால் தற்போது வந்த இளம் வீரர்கள் இவரது இடத்தை எளிதில் பிடித்து விட்டனர். ஆனாலும் அணியில் இடம் கிடைக்க போராடிவரும் இவர் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைத்து லீக் போட்டிகளிலும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த சூழ்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் இவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய புவனேஸ்வர் தனது இன்ஸ்டாகிராம் பயோடேட்டாவில் இந்தியன் கிரிக்கெட்டர் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இப்போது அதனை மாற்றி இந்தியன் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் மாற்றம் செய்துள்ளதால் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அவரது ஓய்வு குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது இந்த முடிவைக் கண்ட ரசிகர்கள் மீண்டும் இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து உள்ளனர்.