முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!

0
35

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ….. நெய்வேலி வழி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !!

 

என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

 

இப்போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக போராட்டக்காரர்கள் புறப்பட்டனர்.வாயிலை நோக்கி புறப்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களை கைது செய்தனர். மேலும் அன்புமணியை ஏற்றி சென்ற காவலர் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரின் தடியடிக்கு பதிலடி கொடுத்த போராட்டக்காரர்கள், அவர்கள் மீது கற்களை வீசினர்.இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை கைது செய்துள்ளனர்.

 

இதன் எதிரொலியாக நெய்வேலி வழி மற்றும் சேலம், தஞ்சை,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது