செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்!!

0
120
#image_title

செக் மோசடி வழக்கில் படப்பிடிப்புத் தளத்திலேயே கைதான பிரபல இயக்குனர்!

செக் மோசடி வழக்கு ஒன்றில் பிரபல இயக்குனர் சரண் அவர்கள் சினிமா படப்பிடிப்பு அந்த தலைத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலர் காவல்துறையினரால் கைது செய்யப்படும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, மோசடி வழக்கில் கைதாவது போதைப் பொருட்களை பயன்படுத்துவது என பல்வேறு குற்றங்களிலும் திரைப்பிரபலங்கள் ஈடுபட்டு தான் வருகின்றனர்.

அதில் சிலர் மட்டும் தான் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். அதிலும் ஒரு சிலர் மட்டுமே சட்டத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநரான சரண் அவர்கள் கைது செய்யப்பட்டது அப்போதைய தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கே.வி.சரவணன் என்ற இயற்பெயர் கொண்டவர் இயக்குநர் சரண். இவர் இயக்குநர் இமயம் கே.பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 1998ம் ஆண்டு “காதல் மன்னன்” என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் இயக்குநரானார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. நடிகர் அஜித் குமார் அவர்களுக்கும் காதல் மன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி என ப்ளாக் ஃபர்ஸ்டர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குநர் என்று பெயரை பெற்றார் இயக்குநர் சரண் அவர்கள். ஜே.ஜே; வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்; அட்டகாசம் என அதிரடி ஹிட் படங்களை கொடுத்திருத்தாலும் சரண் அவர்களுக்கு தான் அடுத்தடுத்து இயக்கிய படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன. 2010ஆம் ஆண்டில் இயக்குனர் சரண் அவர்கள் இயக்கிய அசல் படம் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் சிவகாசியில் உள்ள பிரபல நிறுவனமான சிவகாசி பிரிண்டர் ஒர்க்ஸ் நிறுவன உரிமையாளருக்கு 50 லட்சம் ரூபாய் சினிமா விளம்பர போஸ்டர் அடித்ததற்காக தரவேண்டும். ஆனால் இயக்குனர் சரண் அவர்கள் ரொக்கமாக பணத்தை தராமல் செக் மூலம் பணத்தை தந்துள்ளார். ஆனால் செக் வங்கியில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் சரண் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு உரிய நேரத்தில் இயக்குனர் சரண் அவர்கள் ஆஜராகவில்லை. இதன் காரணமாக சரணை கைது செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

காவல் துறையினர் படப்பிடிப்புத் தளத்திலில் தனது்படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் சரண் அவர்களை காவற்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். “ஆயிரத்தில் இருவர்” என்ற படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது தான் அவர் கைது செய்யப்பட்டார். அவரை சிவகாசிக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதிகளின் விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் பிரபல இயக்குநர் அவர்கள் சினிமா படப்பிடிப்பு தளத்திலேயே கைது செய்யப்பட்ட நிகழ்வு அப்போது பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.

Previous articleதிருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! அப்போ சமந்தா வாழ்க்கை? ரசிகர்கள் கவலை!
Next articleஅனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!