பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

0
48
#image_title

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி நகை வாங்கிக் கொள்ளலாம் என்று கண்ணைக் கவரும் விளம்பரங்களை செய்து திருச்சியில் ஒரு நகை கடை மட்டும் வைத்திருந்த பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளர் குறுகிய காலங்களில் நாகர்கோவில், மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை உள்ளிட்ட இடங்களில் பல கிளைகளை திறந்து அசுர வளர்ச்சி அடைந்தார்.

இவரால் மட்டும் எப்படி குறைந்த விலையில் தங்க நகை விற்பனை செய்ய முடிகிறது என்று அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். இந்த கடையில் நகை சீட்டு போட்டால் நல்ல லாபத்துடன் நகையை வாங்கி கொள்ள முடியும் என்று பல்லாயிரக்கணக்கானோர் 11 மாத நகை சேமிப்பு திட்டத்தில் இணைந்து சீட்டு கட்டி வந்தனர்.

தங்கள் கடையில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 9% வரை போனஸ் வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை வெளிட்டு மக்களை கவர்ந்துள்ளனர்.

இதை நம்பி மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் முதலீட்டாளரை பிடித்துள்ளனர். ஆனால் முதிர்வு காலம் முடிந்ததும் முதலீடு செய்தவர்களின் தொகை + போனஸை வழங்காமல் இந்த நகைக்கடை கிளைகள் இழுத்தடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இந்த கடையின் மோசடி செய்துள்ளது என்பதை அறிந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

மோசடி செயல் வெளியில் தெரிவதற்கு முன் பிரணவ் ஜீவல்லர்ஸ் கிளைகள் மூடப்பட்டு விட்டதால் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடும் அதிர்த்தி அடைந்துள்ளனர். இந்த நகை கடையில் நகை சீட்டு போட்டவர்கள் தங்களது பணத்தை திருப்பி வழங்க வேண்டுமென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து செய்த்தனர். அதேபோல் அதன் கிளைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் பல தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னெவென்றால் இந்த கடையில் விற்பனை செய்யப்படும் நகைகளில் பல போலி நகைகள். அதுமட்டும் இன்றி செய்கூலி, சேதாரம் இல்லை என்று கூறி கிராம் அடிப்படையில் அதிக தொகை நிர்ணயித்து விற்பனை செய்து வந்துள்ளது. இதனால் பிரணவில் நகை வாங்கியவர்கள் மற்றும் சீட்டு கட்டியவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தற்பொழுது பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவரது கடைக்கு விளம்பரம் செய்த திரை பிரபலங்கள், யூடியூப் பிரபலங்களை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.