புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு! 

Photo of author

By Amutha

புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு! 

ஐடி ஊழியரின் ஆபாச படத்தை சித்தரித்து இணையத்தில் விட்டதாக போலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திடீரென தற்கொலை செய்துக்கொன்டுள்ளார்.

கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ஆதிரா வயது 26. இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும் கொத்தாநல்லுரை சேர்ந்த அருண் வித்யாதரன் வயது 32 என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அருணின் சில கெட்ட பழக்கங்கள் ஆதிரைக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் ஆதிரை இரண்டு வருடங்களுக்கு முன்னால் அருணை விட்டு விலகிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆதிராவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஒரு மாப்பிள்ளை பிடித்து போகவே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை பெண் பார்க்க வருவதாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அருணுடன் நெருக்கமாக இருக்கும்   ஆதிராவின் படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் பரவி உள்ளது. இதனால் கடுமையான அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான ஆதிரா தற்கொலை செய்துக்கொன்டுள்ளார்.

இதையடுத்து தங்கள் மகளின் சாவுக்கு காரணமான ஆபாச படம் வெளியிட்ட அருண் மீது ஆதிராவின் பெற்றோர் புகார் தெரிவிக்கவே போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை தேடி வந்துள்ளனர். 40 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் நான்கு நாட்கள் ஆகியும் குற்றவாளியை போலிசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் போலீசார் லுக் அவுட் நோட்டிசை வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் காசர்கோடு வடக்கு கோட்டச்செரியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் ஆதிரை வழக்கில் சம்பந்தப்பட்ட அருண் என்பது தெரிய வந்துள்ளது. அவர் அங்கு ராஜேஷ்குமார் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளார். கடந்த 2-ஆம் தேதி அறை எடுத்த அவர் சாப்பிடுவதற்கு மட்டும் வெளியே சென்றுள்ளார். தூக்கில் சடலமாக  மீட்கப்படுவதற்கு முந்தின இரவு அவர் மிகவும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.