பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்

Photo of author

By Rupa

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்

Rupa

Updated on:

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்!!

தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். முதலில் இசையமைப்பாளராக இருந்த இவர் நடிகர் தயாரிப்பாளர் என பலவற்றில் கால் பதிக்க ஆரம்பித்தார். இவரின் படங்களில் பிச்சைக்காரன் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் ஆரம்பித்தார். சமீபத்தில் கூட விஜய் ஆண்டனியின் கான்செர்ட் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் பாடல் மழையில் மகிழ்ச்சி அடைந்தனர்.

அது மட்டுமின்றி சமூக ஊடகங்களில் பலவற்றிற்கும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.இவர் சன் டிவி பிரபல தொகுப்பாளினியை காதலித்து பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு லாரா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

லாரா தற்பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட விஜய் ஆண்டனி குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர் லாரா முன்பே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மேற்கொண்டு இது குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை செய்யப்பட்டு வருகிறது.