பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!

0
153
Famous poet's younger son died suddenly!! Political celebrities who condoled!!
Famous poet's younger son died suddenly!! Political celebrities who condoled!!

பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.அங்குதான் அனுமன் காட் எனும் பகுதி உள்ளது.

மகாகவி பாரதியார் அவர்கள் தனது தந்தை இறந்த பின்பு அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நான்கு ஆண்டுகளாக பாரதியார் அவரது மாமா வீட்டில்தான் இருந்தார்.

அவர் இருந்ததன் நினைவாக அனுமன் காட் முன்பு அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் மகாகவி பாரதியார் இறந்த பின்பு அவர் வாழ்ந்த வீட்டில்  அவருக்கு நினைவிடமாக அமைத்துள்ளது .

அக்காலத்தில்  பாரதியாரின் சொந்த அத்தை வாரணாசியில் வாழ்ந்து வந்தார். மேலும் அவரது மகன் கேதார்நாத் சிவன் என்பவருக்கும்  மற்றும் பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாளுக்கும்  பெரியவர்களால்  திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் தங்கை மகனான கே.கிருஷ்ணன் வாரணாசியில் உள்ள பாரதியார் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.அவரின் வயது 97 என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இவருக்கு தமிழ் ,தெலுங்கு ,இந்தி போன்ற 6 மொழிகளை கற்று தேர்ந்தவர். இவர் இசைத்துறை பேராசிரியாக   பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த நிலையில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறுகளையும் அவரது கவிதைகளையும் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்த்தார். இதனை அடுத்து இவரின் கலைத்துறை பணியை பாராட்டி தமிழக அரசு இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது.

தற்பொழுது இவர் வாரணாசியில் உள்ள பாரதியார் இல்லத்தில் காலமானார். இவரின் மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleசிறுமலை பகுதியில் தொடங்கிய விடுதலை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 
Next articleகுறைந்த சம்பளம் வாங்கிய டாப் காமெடி நடிகர்!! ரசிகர்கள்  இடையே அதிர்ச்சி!!