விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0
239
Vijay TV
Vijay TV

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதிலும் பிரபல சீரியல்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ராவின் திடீர் மரணம் சின்னத்திரையையே உலுக்கியது.

விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக முல்லையாக ரசிகர்கள் மனதில் மனம் வீசிய விஜே சித்ரா, காதல் கணவர் ஹேமந்துடன் நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது தூங்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பல விஷயங்கள் தற்கொலையில் புரியாத புதிராக இருந்து வருகிறது. விஜே சித்ராவின் மரணத்தில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், பிரபல சின்னத்திரை நடிகர் இன்று மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

சரவணன் மீனாட்சி சீரியலில் அப்பாவாக நடிக்க ஆரம்பித்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயின் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ். . சன் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்டி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சியில் மட்டும் ஈரமான ரோஜாவே மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வந்தார்.
கிராமத்து தந்தை கதாபாத்திரத்திற்கு பெருத்தமான தேர்வு என்பதால், பல சீரியல்களில் அப்பா கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேஷ் காலமானார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்!
Next articleரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் – ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here