உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

0
108
#image_title

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

 

இந்த ஆண்டுக்கான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

50 ஓவர் கொண்ட ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ அனுப்பிய வரைவு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் மாதம் 15ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர் கொள்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8ம் தேதி தொடங்குகிறது. அது போல அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

 

இந்த வரைவு அட்டவணை உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப்படும். பின்னர் அடுத்த வாரம் இறுதியில் உலகக் கோப்பை தொடருக்கான இறுதி அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியா அணி விளையாடும் உலக்கோப்பை தொடருக்கான தற்காலிக அட்டவணை;

 

  1. அக்டோபர் 8 ம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றது.
  2. அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றது.
  3. அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் இந்திய் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றது.
  4. அக்டோபர் 19ம் தேதி புனேவில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடுகின்றது.
  5. அக்டோபர் 22ம் தேதி தர்மசாலாவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றது.
  6. அக்டோபர் 29ம் தேதி லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றது.
  7. நவம்பர் 2ம் தேதி மும்பையில் இந்தியா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் அணியுடன் விளையாடவுள்ளது.
  8. நவம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளது.
  9. நவம்பர் 11ம் தேதி பெங்களூருவில் இந்தியா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் மற்றொரு அணியுடன் விளையாடவுள்ளது.