எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா??

Photo of author

By CineDesk

எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா??

CineDesk

Fans who criticized LGM movie!! Will Dhoni postpone the collection??

எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா??

கிரிக்கெட் வீரரான தோனியின் தயாரிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் தான் LGM.  இப்படத்தின் விமர்சனங்களை பற்றி கீழே பார்ப்போம்.

ஐ.டி நிறுவனத்தில் ஹீரோவான ஹரீஷ் கல்யாண் பணியாற்றி வருகிறார். இவருடன் ஹீரோயின் இவானாவும் பணியாற்றுகிறார். ஹீரோவுடைய அம்மா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையான நதியா நடித்திருக்கிறார்.

இவருடன் வருங்காலத்தில் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்று இவானா கூறுவதால் இவர்களின் திருமணம் தடைபடுகிறது. எனவே, மாமியாருடன் நான் பழக வேண்டும். பிறகு திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறேன் என்று இவானா கூறுகிறார்.

இதற்காக இரு குடும்பங்களும் இணைந்து வெளியில் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு நதியாவை இவானா புரிந்து கொண்டாரா? இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா என்பது தான் இத்திரைப்டத்தின் முழு கதையாகும்.

இதில் நடிகர் ஹரீஷ் கல்யாண தன்னுடைய பன்முக நடிப்பை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார். இதேப்போல நடிகை இவானா தன்னுடைய அழகான நடிப்பால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.

மகனுக்கு திருமணம் செய்து வைக்க நதியா செய்யும் ஒவ்வொரு செயலும் பார்ப்போரை வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இதில் நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் யோகிபாபு மற்றும் ஆர்.ஜே.விஜய் அற்புதமாக நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்துள்ளார். இதில் இவானா மற்றும் நதியாவின் காட்சிகள் பார்ப்பவரை ரசிக்க வைக்கும் விதமாக உள்ளது.

இவர்கள் இருவரும் பேருந்தில் முறைத்து கொள்வது, பப் யில் குடித்து விட்டு இருவரும் ஆட்டம் போடுவது என்று பல காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

இருப்பினும் கதையில் இன்னும் சிறிதளவு கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரின் அம்மாவிடம் எப்படி பழக வேண்டும் அப்பெண்ணின் மனநிலை என்ன என்பதை வைத்து வித்தியாசமான கதைகளத்தில் இந்த எல்ஜிஎம் படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி உருவாக்கி உள்ளார்.