அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!!
அரசு பேருந்துகளில் 15,20, 30 ரூபாய்கள் என்ற அளவிற்கு பேருந்து கட்டணத்தை போக்குவரத்து துறை உயர்த்தியுள்ளது.
பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இந்த நிலையில் இதன் கட்டணம் உயர்ந்ததால் பேருந்து பயணிகள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பேருந்து கட்டணம் உயர்ந்ததற்கு முதல் காரணம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில் பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் செல்லும் பேருந்துகளில் இரண்டு மடங்காக சுங்க கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த சுங்க கட்டணம் அதிகரித்ததால் கர்நாடக அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 15,20, 30 ரூபாயிகள் என்ற மதிப்பில் உயர்த்துவதாக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் 15 ரூபாய்கள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ராஜஹம்சா பேருந்துகளில் 20 ரூபாயும் ,எலக்ரானிக் பேருந்துகளில் 30 ரூபாய்கள் என்று பயண கட்டணத்தை கர்நாடக அரசு உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு போக்குவரத்து சேவை வழங்கும் கர்நாடக அரசு இதற்கும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும் இதனை போல் கேரளாவிற்கு செல்லும் பேருந்து கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு கோவை ,கிருஷ்ணகிரி ,சென்னை உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்து சேவை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.