ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன?

0
223
Farmer suicide in Erode district! What is the reason?
Farmer suicide in Erode district! What is the reason?

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாசாமி (70). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கிருஷ்ணசாமியின் மனைவி கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் கிருஷ்ணசாமி தனியாக வசித்து வந்துள்ளார். கிருஷ்ணசாமி சில நாட்களாகவே உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கிருஷ்ணசாமி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று கிருஷ்ணசாமி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் சுயநினைவின்றி விஷம் குடித்துள்ளார் எனவும் அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது.

மேலும் கிருஷ்ணசாமி மீட்டு உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.  மேலும் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஉறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!..
Next articleபிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு  சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..