உறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!..

0
134
Russia attacked again in violation of commitment! Criticism that is fair!..
Russia attacked again in violation of commitment! Criticism that is fair!..

உறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!..

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கி, ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா கருங்கடலில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டது.

தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண  சென்ற வாரம் ஐ.நா மற்றும் துருக்கி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக தானே ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும்,உக்ரைனும் கையெழுத்திட்டன.

அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரைன் துறைமுகங்களில் தாக்குதல் ஒருபோதும் நடத்த மாட்டோம் என ரஷ்யா உறுதியளித்திருந்தது.இந்நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரத்திலேயே ரஷ்யா ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரைனில் ஒடேசா துறைமுகத்தின் மீது சரமரியாக பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து உக்ரைனும் இச்சம்பவத்தை  வன்மையாக கண்டித்தது.இந்நிலையில் ராணுவ இலக்குகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி தாக்குதலை ரஷ்யா படையினர் நியாயப்படுத்தியது. இந்நிலையில் கருங்கடலிலுள்ள உக்ரைன் பிராந்தியங்கள் மீது ரஷ்யா பலவீனமாக தாக்குதலை நடத்த தீவிரப்படுத்தி உள்ளது.

ஒடேசா பிராந்தியத்தில் உள்ள பல கிராமங்களில் எண்ணற்ற குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டடங்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்கப்பட்டதாக உக்கிரன் தரப்பு தெரிவித்துள்ளது. உறுதியளித்ததை மீறி ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இது சாத்தியமாகுமா என்று ஐ.நாவும் உக்கரையிலும் கண்டித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K