பெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!

0
185

பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கலாமா நகரில் வசித்து வந்த 16 வயது சிறுமி அவரது வீட்டில் கடந்த 6ம் தேதி தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்ப்படனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி இறப்பிற்கு முன்னர் எழுதிய 5 கடிதங்களை கைப்பற்றினர்.

அந்த கடித்ததில் தனது தற்கொலைக்கு காரணம் தனது தந்தை, வளர்ப்பு தாய், பாட்டி, மாமா, அத்தை, தாத்தா என குறிப்பிட்டிருந்தார். இந்த கடித்தத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தந்தையே மகளை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. தனது உறவினரை வழக்கில் சிக்க வைத்ததால் மகள் மீது ஆத்திரத்தில் இருந்த அவர் தனது மகளை கொலை செய்ய முயன்றார்.

அதன்படி, மகணை மிரட்டி தற்கொலை செய்து கொள்ளுமாறு நாடகமாட வேண்டும் என மிரட்டியுள்ளார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்த மகளும் 5 கடிதங்கள் எழுதிய பின்நாற்காலியில் நின்றவாறு தூக்கு கயிறில் தலையை விட்டுள்ளார்.அப்போது அவரின் தந்தை நாற்காலியை தள்ளியதோடு மகள் துடிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார். மேலும், அவரது மற்றோரு மகளையும் அதனை காணவைத்துள்ளார்.

அவரது செல்போனில் இருந்து ஆதாரங்களை சேகரித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உறவினருக்காக பெற்ற மகளையே துடிக்க துடிக்க கொலை செய்த சைக்கோ தந்தையின் செயல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleEWS தீர்ப்பு : மறு ஆய்வு செய்யும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் வரவேற்பு..!
Next articleஇன்று கனமழை.. நாளை மிதமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!