ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் ஜான் சீனா நகரை சேர்ந்தவர் சிவகுமாரவேல் (60). மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன் கிஷோர் என இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் கணேசனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இரண்டாவது மகன் திருமணம் செய்யாமல் பெற்றோர்கள் தாமதம் செய்து வந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

மேலும் கிஷோர் செய்வதை கண்ட தந்தை சிவகுமாரவேல் மனவேதனையில்லிருந்து வந்தார். இந்நிலையில் சிவகுமாரவேலின் இரண்டாவது மகன் கிஷோர் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலும் தந்தை சிவகுமாரவேல் அண்ணன் கணேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் பல இடங்களில் கிஷோரை தேடி வந்தனர்.

ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மகன் காணாமல் போனதை எண்ணி மிகுந்த வேதனையில் இருந்த சிவகுமாரவேல் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மனமுடைந்து அவரது மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.