மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

0
296
Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!
Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

 ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்புசாமி (45) இவரது மனைவி சுமதி (38) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் சஞ்சய் (15) மற்றும் சந்துரு (13). அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.

சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மேலும் பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சஞ்சய் 3 பாடத்தில் தோல்வி பெற்றார்.  அதனால் அப்புசாமி சஞ்சியை டுடோரியல் காலேஜில் சேர்த்து விட்டு மீண்டும் படித்து தேர்வு எழுதுமாறு கூறினார். ஆனால் சஞ்சய்க்கு டுடோரியல் காலேஜ் செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லாததால் வகுப்புக்கு செல்லாமல் மறுத்தார்.

தன்மகன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததை நினைத்து மனமடைந்து காணப்பட்டார் அப்புசாமி. இந்நிலையில் கடந்த 1ஆம்  தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் அந்த நேரத்தில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அப்பு சாமியை பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு  அரசு மருத்துவமனையில் அப்புசாமியை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அப்புசாமி நேற்று உயிரிழந்தார். மகன் படிப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக தந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்!
Next articleநிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!