மருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா?

Photo of author

By Parthipan K

மருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா?

ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன்.இவருடைய மனைவி காளியம்மாள்.இவருகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.உதயசூரியன் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது காளியம்மாளின் தந்தை வந்துள்ளார்.தகராறு நடப்பதை கண்டு மருமகனை ஒரு முறை கண்டித்துள்ளார்.

ஆனால் அந்த தகராறு ஆனது நடந்து கொண்டே இருந்தது.இந்நிலையில் வாக்குவாதம் முற்றியது.அவருடைய பெண்க்கு ஏற்பட்ட நிலைமையை கண்டு ஆத்திரம் அடைந்த தந்தை மறைத்து வைத்திருந்த கத்தியால் மருமகனை தாக்கியுள்ளார்.அந்த தகராறில் மருமகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

.மேலும் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த காலகட்டத்தில் மாமனார் மருமகனை அடித்து கொலை செய்வது ,மாமியாரை மருமகன் அடித்து கொலை செய்வது போன்ற சம்பவங்கள் ஆங்கங்கே நடைபெற்று தான் வருகின்றது.