உத்திரபிரதேசத்தின் மீரட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜு சீமா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். என்னதான் இவர்களுக்கு 3 மகள்கள் என்றாலும் இருவருக்கும் எப்போதும் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்து வந்துள்ளது.
சீமா மீது ராஜுவுக்கு எப்போதும் அதீத சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் சீமா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட தொடங்கியுள்ளார். அவரின் ரீல்ஸ் சற்று பேமஸ் ஆகி அனைவரும் ரசிக்க தொடங்கியும் கமெண்ட் செய்தும் வந்துள்ளனர். ஒரு படி மேலே சென்று போன் செய்து வந்துள்ளனர். அதை பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார் ராஜு.
ஒரு நாள் குழந்தைகள் தூங்கும் போது அவர் மனைவியை செங்கலால் கொடூரமாக தாக்கியுள்ளார். பின் குழந்தைகள் விழித்துக் கொண்டனர் ஆனால் ராஜு மிரட்டி தூங்க வைத்துள்ளார். ஆனால் தூங்குவது போல நடித்துள்ளது குழந்தைகள். பின் ராஜு சீமாவை இழுத்து சென்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து ராஜுவை தேடி வருகிறது. இன்னும் ராஜு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த கிராமத்தையே நடுங்க வைத்துள்ளது.