அப்பாவே ஆதரவு.. ஆணாக மாறிய முன்னாள் முதல்வரின் மகள்!!

0
142
#image_title

அப்பாவே ஆதரவு.. ஆணாக மாறிய முன்னாள் முதல்வரின் மகள்!!

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சியாரின் மகள் சுசேதனா தான் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்ஸ் மென் ஆக மாறப்போவதாக கூறியுள்ளார்.

தற்பொழுது பெண்ணாக இருப்பவர்கள் ஆணாக மாற நினைத்தாலும் சரி ஆணாக இருப்பவர்கள் பெண்ணாக மாற நினைத்தாலும் சரி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஓர் அறுவை சிகிச்சையில் செய்து கொள்ளலாம்.

LGBTQ ஆர்வலர் அச்ச முகத்தை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் குறித்து சுசீதனா பேசிய வீடியோ ஒன்றை ஒரு கருத்தரங்கில் வெளியிட்டார். இவ்வாறு அவர் வெளியிட்ட பிறகுதான் முன்னாள் முதல்வரின் மகள் சுசைதனா ட்ரான்ஸ்மென்னா மாறப் போகிறார் என்ற உண்மை வெளியே தெரிந்தது.

இதனை அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்று சுசேதனாவிடம் பேட்டி எடுத்தது. அதில் அவர் கூறியதாவது, நான் டிரான்ஸ் மெண்ணாக மாறுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.

மேற்கொண்டு எனது தனிப்பட்ட விருப்பத்தை எனது குடும்பத்துடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். நான் மனதளவில் ஆணாக என்னை நினைத்துக் கொள்கிறேன் இதை உடலளவிலும் உணர விரும்புகிறேன். அதனால்தான் அறுவை சிகிச்சைக்கான அடுத்தகட்ட நகர்வுக்கு சென்று உள்ளேன்.

இதனை எனது குடும்ப அடையாளத்துடன் யாரும் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். ஆணாக மாறுவதற்கான அனைத்து சான்றிதழ்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வாங்கி வருகிறேன்.

தற்பொழுது தோன்றிய எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருந்தால் கட்டாயம் எனது அப்பா ஆதரவு தெரிவித்து இருப்பார் என்று இந்த பேட்டியில் கூறினார்.

Previous articleஇனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!
Next articleபால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!