இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!

0
95
#image_title

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் முதல் மலிவு விலையில் பொருட்கள் முதல் அனைத்தும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவ்வபோது பல அறிவிப்புகளும் வெளியிட்டு வருகின்றனர்.

தற்பொழுது தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கேழ்வரகு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் வகைகள் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

ரேஷன் கடைகளில் பாமாயில் தவிர்த்து தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் போன்றவற்றையும் வழங்கவும் கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தாராபுரத்தில் தென்னை விவசாயம் மேம்பாட்டு குழு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.

இதில் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையை காட்டிலும் குறைவான விலையிலேயே தேங்காய் விலை கொள்முதல் செய்வதாகவும் இதனை தடுக்க மத்திய அரசு அதிகாரப்பூர்வ விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு அதிகாரப்பூர்வ விலை நிர்ணயித்தால் விவசாயிகள் பெருமளவில் பயனடைய முடியும். அதேபோல விலை நிர்ணயம் செய்து விட்டால் மத்திய அரசு ஆனது தமிழக விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை கொள்முதல் செய்த அனைத்து பேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேற்கொண்டு விவசாயிகளின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிந்துரை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும் எனவும் நாளடைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.