கடகடவென உடல் எடையை குறைக்கும் தினை இட்லி!!சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Gayathri

கடகடவென உடல் எடையை குறைக்கும் திணை இட்லி : சுவையாக செய்வது எப்படி?

திணை பயன்கள்

திணை ஒரு புல்வகையைச் சேர்ந்தது. திணையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும், திணையில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் திணையில் பல மடங்கு சத்துக்கள் உள்ளது. திணையில் நார்ச்சத்துக்கள் உள்ளதால், தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும். எனவே, அரிசிக்கு பதிலாக தினை அரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

சரி…. எப்படி திணை இட்லி செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருள்கள்

திணை அரிசி – 2 கப்
இட்லி அரிசி – 2 கப்
வெந்தயம் – அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடுகு – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கருவேப்பில்லை – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி – சிறிதளவு
துருவிய கேரட் – தேவைக்கேற்ப
கடலைப் பருப்பு – சிறிதளவு

செய்முறை

திணை அரிசி, உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாக கழுவி தனித் தனியாக 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர், ஊறிய அனைத்தையும் மிக்ஸியிலையோ அல்லது கிரைண்டரிலையோ அரைக்க வேண்டும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் மாவு நன்றாக புளித்திருக்கம்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில், கடுகு, கடலை பருப்பு , இஞ்சி, கருவேப்பில்லை, கொத்தமல்லி, துருவிய கேரட் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதக்கிய கலவை அனைத்தையும் மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர், மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான திணை இட்லி ரெடி.