பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!

0
101
Fee hike in deed department!! Starting today!!
Fee hike in deed department!! Starting today!!

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!

பதிவுத்துறை தொடர்பான சேவைகளுக்கு கட்டணம் அளிக்கப்படுவது எப்போதும் வழக்கத்தில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். இந்த சேவைகளுக்கான கட்டணம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது.

அந்த வகையில் பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்களை எடுப்பது போன்ற சேவைகளுக்கு உரிய கட்டணங்களை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, கட்டண விவர அட்டவணையிலுள்ள இருபது இனங்களுக்கான கட்டணங்களின் வீதங்கள் மற்றும் ஆவணப் பதிவுகளுக்கான பதிவு, முத்திரைக் கட்டண வீதங்கள் முதலியவை பதிவுச்சட்டம் 1908 இன் பிரிவு 78 இன் கீழ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியாக வீட்டை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 1000 ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 10,000 என்று இருப்பதை சொத்தினுடைய சந்தை மதிப்பிற்கு ஒரு சதவிகிதம் ஆகவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுத்துறை சேவைகளுக்கான கட்டண உயர்வானது ஜூலை பத்தாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

Previous articleமுதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு!!
Next articleமுன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!!