பலவீனமாக உணர்கிறீர்களா? பாலில் இந்த இரண்டு பொருளை சேர்த்து சாப்பிடுங்க!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை பலவீனம். அந்த காலத்தில் வயதானவர்கள் பலவீனம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது குழந்தைகளிலிருந்து அனைவருக்கும் இந்த காலகட்டத்தில் பலவீனமாகவே உணர்கின்றனர். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த பலவீனத்தை சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் தேவைப்படுவது வால்நட். இது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. இதிலுள்ள fatty acid நம் இதயத்திற்கு பலத்தை அளிக்கும். அடுத்து நமக்கு தேவைப்படுவது உலர் திராட்சைகள். இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.
அடுத்ததாக தேவைப்படுவது கற்கண்டு. சிறிய கற்கண்டுகளை பயன்படுத்தக் கூடாது. பெரிதாக இருக்கக்கூடிய கற்கண்டுகளை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். கடைசியாக நமக்கு தேவைப்படும் பொருள் பசும்பால்.
செய்முறை:
பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு பசும் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பால் சிறிதளவு சூடானவுடன் அதில் நான்கு வால்நட், நான்கு உலர் திராட்சை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதில் பெரிய கற்கண்டை நன்கு பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பை நிறுத்தி விடலாம். இதை காலையில் நீங்கள் கிளம்புவதற்கு முன்னால் குடித்துவிட்டு செல்லலாம். அல்லது மதிய உணவிற்கு முன்பாக இதை குடித்து வரலாம். இவ்வாறு இதை பருகுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவீனத்திலிருந்து விடுபட்டு அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.