பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!!
கடந்த 7ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் அவரது தோழியுடன் சுற்றுலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு வந்துள்ளார்.
பெண் வக்கீலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர் சுற்றி பார்க்க செல்லாமல் அறையில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார். எனவே அவரது குழந்தைகள் தோழியுடன் சுற்றுலா பகுதிகளை பார்க்க வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ராஜா, இவர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமாக இரண்டு தங்கும் விடுதிகள் உள்ளது. மேலும் கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில் பெண் வக்கீல் தங்கி இருந்த அறையில் “WIFI” வேலை செய்யவில்லை என்று கூறி வக்கீல் பெண் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த அப்துல்கனி ராஜா வக்கீல் பெண்ணிற்கு உடல்நிலையை பரிசோதனை செய்வதாகக் கூறி பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் பக்கத்துக்கு விடுதியில் அறை எடுத்து தங்கிக் கொண்டார்.
மேலும் வக்கீல் பெண் அளித்த புகாரின் பேரில் அப்துல்கனி ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரை விசாரணை முடித்து சிறைக்கு அழைத்து செல்லும்போது மயங்கி கிழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை முடித்த பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் கொடைக்கானல் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.