உலகம் முழுவதும் கொரோனாவால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் இயல்புநிலைக்கு திரும்ப போராடி கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது அதே சமயத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குனமடைந்துளனர். அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடதில் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது.
பிரேசில் 2 வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் அவசர ஆலோசனை நடத்தினார். அவர் சில அதிர்ச்சியான தகவலை கூறினார் நாம் இன்னும் கொரோனா பாதிப்பை முழுமையாக உணரவில்லை மேலும் உடனே தடுப்புசி கண்டுபிடித்தாலும் கூட அதை குறைந்த காலங்களில் அனைவருக்கும் அளிக்க முடியுமா என்று தெரியவில்லை நாம் அதுவரை நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் என்று கூறினார்.
.