நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்!

0
163
Finance Minister Nirmala Sitharaman's announcement! India is ready to share this service with other countries!
Finance Minister Nirmala Sitharaman's announcement! India is ready to share this service with other countries!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்!

கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை  தொடங்கி வைத்தார்.மேலும் இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழு ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடினார்.அப்போது அவர் இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.மேலும் தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒரு சில முக்கிய பாகங்கள் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனை பற்றி நாம் பெருமிதம் கொள்கின்றோம் எனவும் கூறினார்.மேலும் 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் 2024 க்குள் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் 5ஜி சேவையை பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Previous articleதேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!
Next articleஇன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!