சர்க்கரை இருபவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆனால் சில வகை ஆரோக்கிய உணவுகளே இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் வந்துவிட்டால் பிடித்த உணவுகள் மற்றும் ஆசை உணவுகளுக்கு டாட்டா சொல்லிட வேண்டியது தான்.அனைவரும் விரும்பும் அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.ஆனால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு உணவுகள் பக்கம் தலைவைத்து கூட படுக்க கூடாது.காரணம் இனிப்பு உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை மளமளவென உயர்த்திவிடும்.
ஆனால் குறைவான அளவு இனிப்பு உணவுகளை சாப்பிடலாம்.சுகர் ப்ரீ உணவுப் பொருட்களை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயராது.சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை.
சர்க்கரை உள்ளவர்கள் நெய் உணவுகளை சாப்பிடலாமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.சமையலுக்கு எண்ணெய்க்கு மாற்றான நெய் பல்வேறு இனிப்பு உணவுகள் செய்யப் பயன்படுகிறது.உணவின் சுவையை அதிகரிக்கும் நெய் முக்கிய ஆரோக்கிய பொருளாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் நெய் சேர்த்துக் கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.சுத்தமான பசு நெய் இன்சுலின் சுரப்பிற்கு உதவுதால் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் ஒரு தேக்கரண்டிக்கு மேல் நெய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.