தற்பொழுது கார்த்திகை மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த மாதத்தில் மாலை அணிந்து கொண்டு சபரிமலை செல்பவர்கள் ஏராளம்.சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறையை அனைவரும் அறிவீர்.ஆனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
முருக பக்தர்கள் தைப்பூசம்,பங்குனி உத்திரம்,ஐப்பசி கந்த சஷ்டியின் போது தான் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.அதேபோல் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து முருகனுக்கு விரதம் இருந்தால் அவரின் அருள் கிடைத்து வாழ்வில் நன்மைகள் நடக்கும்.
கார்த்திகை மாதத்தில் முருகனுக்கு மாலை அணிய உள்ளவர்கள் 108 மணிகள் உள்ள ருத்ராட்ச மாலையை அணிய வேண்டும்.முருகன் டாலர் பொறித்த மாலை மற்றும் துணை மாலை என இரண்டு மாலைகள் அணிய வேண்டும்.
கிருத்திகை,சஷ்டி திதி,விசாகம் மற்றும் செவ்வாய் நாளில் மாலை அணியலாம்.மாலை அணிய இருபவர்கள் முந்தைய நாளில் இருந்தே விரதம் கடைபிடிக்க வேண்டும்.
முருகனுக்கு விரதம் இருக்கும் முறை:
மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் வெறும் தரையில் தான் உறங்க வேண்டும்.கால்களில் செருப்பு அணியக் கூடாது.
மாலையை கழட்டும் வரை முடி திருத்தும் செய்யக் கூடாது.மது மற்றும் புகை பழக்கங்களில் ஈடுபடக் கூடாது.மாலை அணிந்தவர்கள் யாரிடமும் கோபம் கொள்ளக் கூடாது.கடும் சொற்களை பேசக் கூடாது.மாலை அணிந்தவர்களுக்கு தாம்பத்திய சிந்தனை ஏற்படவே கூடாது.
விரத நாட்களில் ஒருவேளை உணவு எடுத்துக் கொள்ளலாம்.முடியாதவர்கள் மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ளலாம்.அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.தனி தட்டு மற்றும் டம்ளர் போன்றவற்றையே பயன்படுத்த வேண்டும்.முருகன் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் மாலையை கழட்டிவிடலாம்.