நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

0
170
Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?
Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

உக்ரைன் ரஷ்யா போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து ரஷ்யா படையினர் திடீரென உக்ரைனில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி பட்ட ஜனங்களின் உயிர் பிரிந்து வருகிறது.இந்த தாக்குதல் துவங்கியதைத் தொடர்ந்து தங்களுக்கும் அதே கெதி நிலை தான் ஏற்படும் என்று நினைத்தது பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டினர்.

இதன் காரணமாக நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது.மேலும் நேட்டோ அமைப்பில் சேர வேண்டுமானால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எல்லா உறுப்பு நாட்டையும் தாக்கியதற்கு சமம்.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்படும். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில் அட்லாண்டிக் கடல் கடந்த கூட்டணியின் விரிவாக்கத்தை ஆதரித்து நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு அமெரிக்க செனட் ஒரு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, மேலும் நெட் பிரைஸ் தனது டுவிட்டரில் நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிக அளவில் வலுப்படுத்தும். இது முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக இரண்டு நாடுகளின் இணைப்புக்கு ஆதரவாக செனட் சபையில் 95 திற்க்கு ஒன்று என்ற கணக்கில் வாக்களித்திருந்தது.இந்நிலையில் இதுவரை 30 நேட்டோ நாடுகளில் அமெரிக்கா 23 ஆவது இடத்தைப் பிடித்தது.இதற்கு முன்னதாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிரைவில் கொண்டாடப்படும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா! நாட்டு மக்களுக்கு நற்செய்தி சொன்ன மத்திய அரசு!
Next article26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!